பேலியகொட குற்றப்பிரிவினரால் தெமட்டகொட பகுதியில் வீடொன்றில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருந்தபோது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளம்பிட்டியவை சேர்ந்த 28 வயதுடைய தம்பதியினர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   குற்றச்செயல்களுக்காக சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கடந்த மாதம் 3 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்திருந்தது.   கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு! விடுதியில் பதுங்கியிருந்த தம்பதியினர் கைது | Couple Suspected Dematagoda Arrested இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த ஒரு இளம் தம்பதியினர் பொலிஸாரிடமிருந்து தப்பியோடி மறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.