கொழும்பில் தமிழர்கள் உட்பட பலரின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை
vidiyel 9 ஆவணி 2026 · 01:34 12 views
Ad Space
Ad Space
சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு நகரில் சொத்து வரிச் செலுத்தப்படாமை காரணமாக பல சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
காணிகள் பறிமுதல்
மாநகர சபைக்கு வரி செலுத்தாத கொழும்பு 07 பகுதியிலுள்ள 30 காணிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07 உள்ளிட்ட உயர் வணிக மதிப்புள்ள பிரதேசங்களில் உள்ள 30 காணிகள், கொழும்பு கோட்டைப் பகுதியில் 58 காணிகள் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் 67 காணிகள் பறிமுதல் செய்யும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள வரிப் பண அறவீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.