அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக மூடப்பட்டிருந்த  கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவை பகுதி இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.   

கீழ் கடுகன்னாவை  பகுதியில் வீதியில் விழும் அபாயத்திலுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பாரிய கற்பாறைகளை அகற்றுவதற்கும், அதனுடன் தொடர்புடைய அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும் நேற்றைய தினம் இரவு 11.00 மணி முதல் இன்றைய தினம்  காலை 6.00 மணி வரை வீதி மூடப்பட்டிருந்தது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கற்பாறை அகற்றும் மற்றும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடாகப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.