கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சனத்தொகை கல்வி குறித்துக் கருத்தரங்கு
Ad Space
Ad Space
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வியாழக்கிழமை (30.07.2026) சனத்தொகை கல்வி குறித்துக் கருத்தரங்கு இடம்பெற்றது
கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்பாண மாவட்ட செயலக தொகை மதிப்பீட்டுத் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் ம.வித்தியானந்தநேசன் அதிதியாகக் கலந்து கொண்டு சனத்தொகை கல்வி பற்றி சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வுகளை இரண்டாம் வருட வர்த்தககல்விநெறி ஆசிரிய மாணவி ஆபிலூன் பர்ஷானா முன்னிலைப்படுத்தினார்
சனத்தொகை வளர்ச்சியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் பற்றிய விசேட உரையினை வர்த்தக கல்விநெறி ஆசிரிய மாணவன் எம் எஸ் ஹீபத்துல்லா ஆற்றினார். அதிதி அறிமுக உரையினைக் கணிதபாட விரிவுரையாளர் த.தவசேகர் ஆற்றினார்.அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார். அதிதிப் பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
Ad Space
Ad Space