நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுப் பின்னர் பொருத்தப்பட்ட ஜீப் வண்டி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் வண்டி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சுங்கத் தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுப் பொருத்தப்பட்ட குறித்த ஜீப் வண்டி, பண்டாரவளை பிரதேசத்தில் இருந்த நிலையில் நேற்று (23) திங்கட்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.