சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தப் பூரணை தினத்தையொட்டிய திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் திருப்புகழ்,கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற அற்புதமான பக்திப் பாசுரங்களைப் பாடித் தமிழ்மொழிக்கும், சைவசமயத்துக்கும் பெருந் தொண்டாற்றிய அருணகிரிநாதர் சுவாமிகள் குருபூசையும் திங்கட்கிழமை (29.06.2026) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
திகாலை முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் அருணகிரிநாதர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வாக இசைக்குயில். கவிதா தில்லைராஜ் குழுவினரின் திருப்புகழ் இசைக் கச்சேரி இடம்பெற்றது. கரவெட்டி சீமா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடந்தேறியது.