சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் நேற்றுத் திங்கட்கிழமை (20.07.2026) மாலை-04 மணியளவில் பதுளை மகளிர் சிறுவர் இல்லத்தில் வைத்து  மூன்று லட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பண்டாரவளையைச் சேர்ந்த பொருளாதாரத்தால் நலிவுற்ற பல்கலைக்கழக மாணவனுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய மடிக் கணனி வழங்கப்பட்டது. பண்டாரவளையைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ஒரு லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது. பதுளை ரோபேரி தோட்டப் பகுதியில் இயங்குகின்ற மரண ஆதார சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகப் புதிய கதிரைகள், தளபாடங்கள் கொள்வனவுக்காக 75 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது.