முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்‌ஷ  (79) இன்று ஞாயிற்றுக்கிழமை (15)  காலமானார்.

உடல்நலக் குறைவினால் காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காலமான சந்திர மாலினி ராஜபக்‌ஷவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.