யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின விழா வியாழக்கிழமை (01.10.2026) காலை மேற்படி பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி.சந்திரலதா கனேந்திரன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதனையொட்டிப் பாடசாலை தரம்-01 மாணவர்களின் பெற்றோர்களான அனைத்துத் தாய்மார்கள் பங்கேற்ற பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கதாநாயகர்களான சிறுவர்கள் விழா மண்டபம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன் சிறுவர்களைக் களிப்புறவும் செய்தது.
இறுதியில் சிறுவர்களான அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் வழங்கி மைதானத்தில் பட்டம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது.