சிறிலங்கா இராணுவத்தளபதி சிறிலங்காபிரதமருடன் சந்திப்பு
Ad Space
Ad Space
இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, நேற்று வெள்ளிக்கிழமை (31) அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் சிறந்த இராணுவச் சேவை, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தாய்நாட்டுக்காகச் செய்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதமர் பாராட்டினார்.
இதன்போது, தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்சார் தரங்களை உயர்மட்டத்துக்குக் கொண்டுவருவதற்காகத் தான் ஆற்றிய பங்களிப்பை முன்னாள் இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.
இச்சந்திப்பின் இறுதியில், பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
Ad Space
Ad Space