சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை வெளியிலும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியவேண்டிய உடைகள் குறித்து பரிந்துரைகளை வழங்க அரசாங்கத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் ஒரு ஏமாற்று வேலையாகும் என மக்களாட்சி இணைந்த எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு குழுவை நியமிக்கவேண்டிய யாதொரு அவசியமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைச் சட்டத்தின் 550ஆம் நிலையியற் கட்டளையில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

"நீதிமன்ற உத்தரவின் பேரிலோ அல்லது வேறு வழக்கு நடவடிக்கைகளுக்காகவோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தண்டனை பெற்ற கைதி ஒருவர், சிறைச்சாலை சீருடையில் (கைதி உடையில்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படக் கூடாது."

"சிறைவாசம் பெறுவதற்கு முன்னர் அவர் சமூகத்தில் வாழும்போது அணியப் பழகிய உடைக்கு அமைவான சாதாரண சிவில் உடையை (அல்லது உரிய கலாசார / மதப் பின்னணிக்குப் பொருத்தமான ஆடையை) அணிவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" என  சுட்டிக்காட்டியுள்ளார்.