தமிழ்த்தேசிய அரசியல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜீன் மாதம்-11 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சில வாரங்களாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் வீடு திரும்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.