மூத்த தமிழ்த்தேசிய அரசியல் தலைவரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை (24.10.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்குக் கடந்த ஜீன் மாதம்-11 ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குறித்த மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.