சீனாவிற்காக ஜேர்மனியில் உளவு பார்த்த தம்பதி: மியூனிக் நகரில் அதிரடி கைது
Ad Space
Ad Space
ஜேர்மனியில் சீனாவிற்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிற்காக உளவு வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டு தம்பதியினர் அந்நாட்டின் மியூனிக் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதியினர் கைது செய்யப்பட்டதை புதன்கிழமை அந்நாட்டின் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள தனியுரிமை சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட தம்பதியினர் Xuejun C. மற்றும் Hua S. என மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜேர்மனியின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்கள் குறித்த தகவலைகளை திரட்டி சீனாவிற்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதியினர் தங்களை மொழிபெயர்ப்பாளர்களாகவும், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஊழியர்களாகவோ காட்டிக் கொண்டு ஜேர்மனியின் தொழில்நுட்ப பேராசிரியர்களை அணுகியுள்ளனர்.
Ad Space
Ad Space