சீனாவுக்காக உளவு பார்த்ததாக பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி கைது
Ad Space
Ad Space
பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானியான பியர் (Pierre-Henri Chuet) என்பவர், முக்கியமான இராணுவத் தகவல்களைச் சேகரித்து சீன உளவாளிகளுக்குக் கொடுத்ததாக பாரிஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணை தொடர்வதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த செய்திகளின்படி, பியர் பிரான்ஸ் கடற்படையில் பணியாற்றியபோது, 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் ஆகிய காலகட்டங்களில், குறைந்தது இரண்டு முறையாவது சீனாவுக்குப் பயணம் செய்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
விடயம் என்னவென்றால், பியர் இந்தப் பயணங்கள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்தப் பயணங்களின் போது, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் ஒன்றின் மூலம் சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக பியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பிரான்ஸ் இராணுவ விமானப் போக்குவரத்து தொடர்பான முக்கியமான செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய அறிவையும் பகிர்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இந்த பியர், சமீபத்தில், இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறனைக் குறித்து கேள்வி எழுப்பியதுடன், சீனத் தயாரிப்பு விமானங்களைப் புகழ்ந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space