சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு: அமெரிக்காவுக்கு தைவான் நன்றி
Ad Space
Ad Space
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவர் நேற்று சந்தித்தார்.
அப்போது, "சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்சினை மிக முக்கியமானது. அதை சரிவர கையாளாவிட்டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டு உறவும் ஆபத்தில் சிக்கும்"என்று ஜின்பிங் எச்சரித்தார்.
சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை ஏற்காத அமெரிக்கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் ஜின்பிங்கின் எச்சரிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தைவான் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மிஷேல் லீ கூறுகையில், "பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு பங்களிக்கும் மற்றும் சர்வாதிகார விரிவாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை நிர்வகிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அரசு சாதகமாகப் பார்க்கிறது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரம் தொடர்பாக அமெரிக்காவுடன் தைவான் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. தைவானை ஆதரிக்கும் தனது உறுதியான நிலைப்பாட்டை அமெரிக்காவும் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு மிஷேல் லீ கூறினார்.
Ad Space
Ad Space