அண்மையில் வீசிய ‘அர்னப்’ புயல் அதனைத் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலையினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம்  01 ஆம் திகதி  வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சீரற்ற வானிலையால் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 03 பேர் காணாமல் போயுள்ளனர்.

08 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நாட்டின் 19 மாவட்டங்களில் உள்ள 137 பிரதேச செயலகப் பிரிவுகள் இச்சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகளவில் இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில்  15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.