நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது மழை சற்று தணிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேரும், உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளதுடன், இயற்கை அனர்த்தங்களால் 2 வீடுகள் முழுமையாகவும் 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை : நுவரெலியா மாவட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு ; ஒருவர் மாயம் ; 3,951 பேர் பாதிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space