சுகாதார அமைச்சர் நெடுந்தீவு, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கு சிறப்பு விஜயம்
Ad Space
Ad Space
வடமாகாண வைத்தியசாலைகளினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வட மாகாண யாழ் தீவகற்ப பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளைக் கண்காணிக்கும் நோக்கில் விசேட விஜயம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை (28) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய யாழ்ப்பாணம் தீவகற்பம் பகுதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அவர் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலையை நேரடியாக மதிப்பீடு செய்தல், அங்கு நிலவும் சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளைத் திட்டமிடுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்போது இரு வைத்தியசாலைகளினதும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.
மருந்து விநியோகம், மருத்துவ உபகரணங்கள், மனித வளம், அவசர நோயாளி போக்குவரத்து வசதிகள், தாய்-சேய் சுகாதார சேவைகள் மற்றும் தொற்று நோய்கள், தொற்றா நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
கடல் போக்குவரத்தைச் சார்ந்து வாழும் யாழ்ப்பாணம் தீவகற்பம் பகுதியில் உள்ள மக்களுக்கும் ஏனையவர்களைப் போன்றே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் . சுகாதார சேவை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அடிப்படை உரிமையாகும். ஆகையால் இந்த வைத்தியசாலைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்பரை விடுத்திருந்தார்.
Ad Space
Ad Space