மாவீரர் நாளை முன்னிட்டு வலிகாமம் தெற்குப் பிரதேச சபை ஏற்பாடு செய்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (27.11.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ். சுன்னாகத்திலுள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபை முன்றலில் இடம்பெறும்.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.