பிரான்ஸ், ஜேர்மனியைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்திலும் ஆர்ப்பாட்டங்கள் துவங்கியுள்ளன.
பிரான்ஸ், ஜேர்மனியைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளிலும் சனிக்கிழமை இரவு ஒரு கூட்டம் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறிப்பாக, சூரிக் மற்றும் பேஸலில், நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

’மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம், போதும், சுவிட்சர்லாந்திலும்’ என்ற பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதாவது, பிரான்சில் மக்கள் ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கும் நிலை உருவாகிவிட்டதுபோல, சுவிட்சர்லாந்திலும் ஒரு நிலைமை உருவாகிவிட்டது, ஆகவே, நாங்களும் ஆர்ப்பாட்டங்களில் இறங்குகிறோம் என்கிறார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
வெடித்த வன்முறை பேரணியாக துவங்கிய விடயத்தில், ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஒரு பேருந்து நிறுத்தத்தின் கூரை அடித்து நொறுக்கப்பட, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பொலிசார் சாலையின் குறுக்கே வரிசையாக அடுக்கி வைத்திருந்த குப்பைத்தொட்டிகளையும், சைக்கிள்களையும், வேறு சில பொருட்களையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர் சிலர்.
பொலிசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்க, பொலிசார் மீது பட்டாசுகளும் போத்தல்களும் கற்களும் வீசப்பட்டுள்ளன.
பொலிசார், கண்ணீர் புகை குண்டுகளாலும் ரப்பர் புல்லட்களாலும் பதிலடி கொடுக்க, நள்ளிரவு 1.30 வரை மோதல் நீடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, சமூக ஊடகங்களில் ’Generation Z is in charge!’ என்னும் ஒரு வாக்கியம் அதிகம் பரவி வருகிறது.
பிரான்ஸ் துவக்கி பல ஐரோப்பிய நாடுகளில் இளைய தலைமுறையினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த வாக்கியத்தைத்தான் சமீபத்தில் ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்கள் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.