அனுமதிக்கப்பட்ட போராட்ட பேரணி நிறைவடைந்த பின்பும், பாரிஸ் நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கான தீவிர போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தனர்.
மேலும் நடைபாதையில் இருந்து உடைத்தெடுக்கப்பட்ட கான்கிரீட் கற்கள் மற்றும் மோலோடோவ் காக்டெய்ல் என்று அழைக்கப்படக் கூடிய எரி குண்டுகளை பொலிஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கலைத்து பாரிஸ் நகர வீதிகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை கலவர தடுப்பு காவல்துறையினர் வீசினர்.
இதனால் சம்பவ இடத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக ஐரோப்பிய நிருபர் அலஸ்டர் பங்கால் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டங்களில் கிட்டத்தட்ட 320000 பேர் கலந்து கொண்டு இருப்பதாக பிரான்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் பாரிஸ் நகரில் மட்டும் சுமார் 70,000 பேர் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரங்களில் நடைபெற்ற போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 17ம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் 5,00,000 பேரும், கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் 4,10,000 பேரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.