சுவிட்சர்லாந்தில் ஒரு பாரிய விபத்து: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பலர் பலி
Ad Space
Ad Space
Ad Space
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள்.திங்கட்கிழமையன்று, நெதர்லாந்து நாட்டிலிருந்து 48 சுற்றுலாப்பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பலர் பலி ஆஸ்திரியா நாட்டை அடைந்து, அங்கிருந்து சுவிட்சர்லாந்தை அடைந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, இரவு 8.10 மணியளவில் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் Graubuenden மாகாணத்திலுள்ள Susch மற்றும் Zernez கிராமங்களுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்தபோது அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த துயர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.என்றாலும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை.எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், சாலையோரமாக இருந்த தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்ததாக பொலிசார் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Ad Space
Ad Space
Ad Space