சுவிஸ் ரயில் நிலையமொன்றில் ஒரு அதிரவைக்கும் சம்பவம்: நான்கு பேர் காயம்
Ad Space
Ad Space
சுவிஸ் ரயில் நிலையமொன்றில், ஒருவர் நான்கு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இன்று காலை, சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள Winterthur ரயில் நிலையத்தில், சுவிஸ் நாட்டவர் ஒருவர் நான்கு பேரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
அது காலை மணி 8.30 என்பதால், அங்கு வரிசையாக பள்ளிப்பிள்ளைகள் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
தாக்குதல்தாரியைக் கண்ட ஆசிரியர் ஒருவர் பிள்ளைகள் தாக்கப்படாமல் குறுக்கே நின்றுகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொலிசார் அந்த 31 வயது நபரைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Ad Space
Ad Space