சூரிய கிரகணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
vidiyel 11 ஆவணி 2026 · 11:26 88 views
Ad Space
Ad Space
நாளை சூரிய கிரகணத்தின்போது பின்பற்ற சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்கள் நிபுணர்கள்.
நாளை பகுதி சூரியகிரகணம் நிகழ இருக்கும் நிலையில், சூரிய கிரகணத்தின்போது பாதுகாப்பாக இருக்குமாறு பாதுகாப்பு நிபுணர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சூரிய கிரகணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர், அதற்காக முறைப்படி தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளையே பயன்படுத்துமாறு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.
அத்துடன், சூரிய கிரகணத்தை புகைப்படம் எடுக்க முயலவேண்டாம் என்றும், புகைப்படம் எடுப்பதை அதற்கென இருக்கும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடம் விட்டுவிடுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.கண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்ப்பது, கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் துறை சார் புகைப்படக் கலைஞரான ஏஞ்சலா (Angela Fux) என்பவர்.
அத்துடன், புகைப்படம் எடுக்கும் கமெரா உதவியுடன் சூரியனைப் பார்ப்பது கூட கண்களை பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர்.