யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, இன்று (17) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
ஏ-9 வீதியிலுள்ள அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, செம்மணிப் பகுதியை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு, சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து இதில் கலந்துகொண்டுள்ளனர்.





