சேமமடு வனப் பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி : மூவர் கைது!
Ad Space
Ad Space
சேமமடு வனப் பகுதியில் தொல்பொருள் சின்னங்களைத் தேடி சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 3 சந்தேக நபர்கள் போகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போகஸ்வெவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் திங்கட்கிழமை (22) நடத்தப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நாச்சாதுவ மற்றும் பூனாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 23, 38 மற்றும் 74 வயதுடையவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space