ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை 5.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.04 மணியளவில் டோக்கியோவுக்கு மேற்கே அமைந்துள்ள ஷிஸுவோகா (Shizuoka) மாகாணத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த பூமியதிர்ச்சியால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், கடைகளின் முகப்புக் கண்ணாடிகள் உடைந்து விழுந்ததாகவும் அலுமாரிகளிலிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த அனர்த்தத்தினால் பலர் சிறிய அளவிலான காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதில், கட்டிலில் இருந்து கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்த 90 வயதுப் பெண் உட்பட 3 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐச்சி மற்றும் ஷிஸுவோகா ஆகிய இரு பகுதிகளிலும் குறைந்தது 24 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.