ஒலிம்பிக் போட்டிகளில், ஜூடோ விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவரான டெடி ரைனர் (Teddy Riner, 37), என்பவர், பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். 

அவருக்கு, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

ரைனர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது நாட்டுக்கு நன்மையைத்தான் கொண்டுவரும் என்று கூறியுள்ளார் இந்நாள் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் ஆதரவை நிராகரித்துள்ளார் ரைனர். 

நான் ஜனாதிபதியின் தூதர் அல்ல என்று கூறியுள்ள ரைனர், ஜனாதிபதியின் வாழ்த்துகளை நான் விவரிக்க வேண்டுமென்றால், அது ஒரு விஷக் கோப்பையைப் (poisoned chalice) போலத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ரைனர் பயன்படுத்தியுள்ள, ’poisoned chalice’ என்னும் பதத்தின் பொருள், ஒரு விடயம் மேலோட்டமாக பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், அதை ஏற்றுக்கொண்டால், அதனால் மறைமுக பிரச்சினைகளும் கெட்ட பெயரும்தான் ஏற்படும் என்பதாகும் .

அதாவது, தீவிர இடதுசாரி, வலதுசாரி என பிளவுபட்டுக் கிடக்கும் பிரான்ஸ் அரசியலில், எந்தப் பக்கமும் சாராமல் நிற்கும் மக்களின் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ளார் ரைனர்.

ஆனால், ரைனர் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல்வதாக விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இந்த நேரத்தில் சரியாக இமானுவல் மேக்ரான், ரைனரை வாழ்த்த, ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சிகளின் சாயம் தன் மேல் படக்கூடாது என்று எண்ணும் ரைனர், மேக்ரானின் ஆதரவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.