ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்
Ad Space
Ad Space
Ad Space
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகர மக்கள், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதிகாலை 4.00 மணியளவில் கேஃப் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடிக்க, சிறிது நேரத்திற்குள் சிற்றி சென்டர் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடித்துள்ளது.கடந்த சில நாட்களில் ஃப்ராங்பர்ட் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களும் Offenbach நகரில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன. ஏற்கனவே திங்கட்கிழமை அதிகாலை Bockenheim நகரில் ஒரு குண்டு வெடித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Sachsenhausen மாவட்டத்திலும் Offenbach நகரிலும் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்கள் அனைத்திலுமே யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, கட்டிடங்களுக்கு மட்டுமே சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.Sachsenhausen என்னுமிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.அதாவது, குற்றவாளிக் கும்பல் ஒன்று பதின்மவயதினரையும் இளைஞர்களையும் இந்த செயல்களில் ஈடுபட வைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.இந்த வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
Ad Space
Ad Space
Ad Space