ஞானசார தேரரை விடுதலை செய்வதற்காக முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தலையிட முன்வந்துள்ளதால், கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை அறிவித்தார்.