டாஸ்மாக் கிடங்கு பராமரிப்பு பணி​களை தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​கள் கழகம் மூல​மாக மேற்​கொள்​வதைக் கைவிட வேண்​டும் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களுக்​குத் தேவை​யான மருந்​துகள் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களைக் கொள்​முதல் செய்து விநி​யோகம் செய்​து​ வரும் தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​கள் கழகம் மூலம், திரு​வள்​ளூர் மாவட்​டம் அம்​பத்​தூர், திரு​மழிசை உள்​ளிட்ட பகு​தி​களில் இயங்​கும் டாஸ்​மாக் கிடங்​கு​களில் பராமரிப்பு மற்​றும் பழுது​பார்ப்​புப் பணி​களை மேற்​கொள்​வதற்​கான ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் அறிவிக்​கப்​பட்​டிருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

அரசு மருத்​து​வ​மனை​களுக்​குத் தேவை​யான மருந்​துகளைக் கொள்​முதல் செய்​வது, அவற்​றின் தரத்​தைப் பரிசோ​திப்​பது, மருந்​துகளின் இருப்​பைக் கண்​காணிப்​பது, உரிய நேரத்​தில் விநி​யோகம் செய்​வது உள்​ளிட்ட மக்​கள் நலன் சார்ந்த பல்​வேறு முக்​கியப் பொறுப்​பு​களைக் கொண்ட மருத்​து​வப் பணி​கள் கழகம், தற்​போது டாஸ்​மாக் தொடர்பான ஒப்​பந்​தப்​புள்​ளி​களை அறி​விப்பது, மக்​கள் நலனை​விட டாஸ்​மாக் விற்​பனைக்​கான கட்​டமைப்​பைப் பராமரிப்​ப​தற்கே தமிழக அரசு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறதோ என்ற சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது.

எனவே, டாஸ்​மாக் உள்​ளிட்ட பிற துறை​கள் சார்ந்த பணி​களை மருத்​து​வப் பணி​கள் கழகம் மூலம் மேற்​கொள்​ளச் செய்​யும் நடவடிக்​கையை உடனடி​யாகக் கைவிட வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.