டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமி உயிரிழப்பு
Ad Space
Ad Space
டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கடுமையான காய்ச்சல் காரணமாக திக்வெல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் அதே நாளில் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்குக் காரணம் என, காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space