டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 14 மாவட்டங்களில் 3 நாட்கள் விசேட ஒழிப்புத் திட்டம்!
Ad Space
Ad Space
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திங்கட்கிழமை (8) முதல் மூன்று நாட்கள் விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய, இரண்டாம் நாளன்று பரிசோதிக்கப்பட்ட இடங்களில் 1,079 சிவப்பு எச்சரிக்கை எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், 711 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் இரண்டாடம் நாளான புதன்கிழமை (10) பரிசோதிக்கப்பட்ட 31,155 பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயமுள்ள 8,069 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,1864 பகுதிகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளன.
அதற்கமைய 1,079 சிவப்பு எச்சரிக்கை எச்சரிக்கை அறிவித்தல்களும்,711 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாடசாலைகள் மற்றும் கட்டுமான பணிகள் இடம்பெறும் தளங்கள் ஆகிய பகுதிகளில் டெங்குப் பரவல் அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 44.7 சதவீதமான பாடசாலைகளில் இலும், 40.4 சதவீதம் கட்டுமான பணிகள்இடம்பெறும் பகுதிகளிலும் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space