மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்த மாநிலத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிர்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின்அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. மாநிலங்களின் மின்தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் இம்முடிவை ஏற்க முடியாது.
இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழுவின் 16ம் கூட்டமும், தென்னிந்திய மண்டல மின்சாரக் குழுவின் 37ம் கூட்டமும் அண்மையில் நடைபெற்றன. அக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதியை, அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நிறுத்தவும், மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அனைத்து மாநில மின்சார வாரியங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களின் மின்வாரியங்களுக்கும் மின்வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
“தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது” - அன்புமணி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space