“நீங்கள் அமைச்சராவீர்களா என்று கேட்கிறீர்கள் அது இறைவன் சித்தம்தான். தவெக ஆட்சியில் நான் 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்.” என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் தாயார் லீமா ரோஸ் கேலரியில் அமர்ந்து பார்த்தார். அவருடன் ஜோஸ் சார்லஸ் மனைவி குடும்பத்தினர் வந்திருந்தனர். லீமா ரோஸ் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுகவில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
“தவெக ஆட்சியில் அதிமுகவுக்கு 8 அமைச்சர்கள் கேட்கிறேனா?” - லீமா ரோஸ் விளக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space