தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால்
Ad Space
Ad Space
இறுதி யுத்தத்தின் கோரங்களை அமைதியாய் சுமந்து நிற்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் தற்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் பொதுச் சுடரின் கீழ் விழுந்து வணங்கி, உயிரிழந்தவர்களை அஞ்சலித்து வருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களோடும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளோடும் அவர்களை அஞ்சலிக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
Ad Space
Ad Space