திங்கட்கிழமை கூடுகிறது நாணயக் கொள்கை சபை!
Ad Space
Ad Space
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையின் கூட்டம் திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆழமாக ஆராய்ந்து இரவுநேரக்கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை உன்னிப்பாகக் கவனித்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 1.6சதவீதம் என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும், உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் பணவீக்கம் 5சதவீதத்தை கடந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தின் தீர்மானம் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் உத்தியோக பூர்வமான இணைதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space