திடீர் திடீரென மனம்மாறும் ட்ரம்ப்
Ad Space
Ad Space
ஈரான் மீதான திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா கடைசி நிமிடத்தில் இரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் மீது இன்று இரவு மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா முழுவீச்சில் தயாராகி வந்தது.
இந்நிலையில், தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஈரான் இஸ்லாமிய அரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்ட தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் இன்று மாலை ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் நான் இரத்து செய்துள்ளேன்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் மற்றும் இறுதி முடிவுகள், கொள்கை அளவிலும் சரி, மிக விரிவான விபரங்களிலும் சரி, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து முக்கிய நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space