திபெத்தில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியால் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர் என ஷின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (22) இரவு 10.33 மணியளவில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி 7.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

திபெத்தின் நக்சு நகருக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 190 கிலோ மீற்றர் தொலைவிலும், பிராந்தியத் தலைநகரான லாசாவிற்கு வடகிழக்கே 390 கிலோ மீற்றர் தொலைவிலும் உள்ள மலைப்பகுதியில் பூமியதிர்ச்சியின் மையம் அமைந்துள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலேயே தாக்கியுள்ளது.

பாசென் மாகாணத்தில் உள்ள மரு சிற்றூரே பூமியதிர்ச்சியின் மையப்பகுதியாகும். அங்குள்ள அலுவலகச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் மின் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியதிர்ச்சியினால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்தப்பகுதியில் இரண்டாம் நிலை பூமியதிர்ச்சி பேரனர்த்த அவசர கால மீட்பு நடவடிக்கை ஆரம் பிக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகளால் சேத மதிப்பீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜனவரியில் திபெத்தின் கிராமப்புற டிங்கிரி மாகாணத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் சுமார் 126 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.