திருகோணமலையில் அரச பேருந்துடன் மோதி விபத்து - சாரதி படுகாயம்
Ad Space
Ad Space
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(19.05.2026) இடம்பெற்றுள்ளது.
தோப்பூரிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துக்கு பின்னால், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மாத்திரம் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space