திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் நேற்று (31) சந்தேகநபரை முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக சந்தேகநபரை சோதனையிட்ட போது ஐஸ் போதைப்பொருள் 12.08 கிராம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - யாட்அப் ரோட் பகுதியில் வசித்து வரும் 29 வயது நபர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விசாரணைகளின் பின் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.