அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை போன்று செயற்படாமல்  வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2027ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும் இம்முறை அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுகாதார துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் வெளிப்படையாக விளங்குகிறது.