துபாய் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 24 காரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட புதிய நடைபாதை ஒன்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க துபாய் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
துபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க டேரா பகுதியில் அமைந்துள்ள 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' வளாகத்தில் இந்த நடைபாதை அமையவுள்ளது.
இந்த பிரம்மாண்ட வணிகப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட தங்க நகை வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்படும் மிக நீளமான தங்க நடைபாதை என்று துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் அழைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், புதிய இந்தச் தங்க நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கம் பதித்த பாதையில் நடக்கும் ஒரு தனித்துவமான ஆடம்பர அனுபவத்தை வழங்குவதும், உலகளாவிய தங்க வர்த்தக மையமாக துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.