ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரயில்கள் இரண்டும் மோதிக்கொண்டதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, மேட்டுப் பகுதியிலிருந்து கீழே விழுந்தன.
இந்த விபத்து டோலிடோ மாகாணத்தில் உள்ள லோஸ் யெபெனஸ் மற்றும் உர்டா ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள மாட்ரிட்-அண்டலூசியா அதிவேக ரயில் பாதையில் இன்று (28) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாட்ரிட்டிலிருந்து செவில்லே நோக்கி சென்றுகொண்டிருந்த 'ரென்ஃபே ஏவிஇ' ரயிலும், எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருந்த 'இரியோ' ரயிலுமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அவசர மருத்துவக் குழுக்கள் விரைந்து சென்று, காயமடைந்த பலருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.