T56 ரக துப்பாக்கி மற்றும் 16 தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய மீட்டியாகொட பொலிஸாருக்கு பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபர் வியாழக்கிழமை (08) பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து 13 ஆம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சந்தேக நபர் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதே வேளை மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையின் (STF) கோனஹேன முகாமின் அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில், கடந்த 07 ஆம் திகதி மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குள் உள்ள ஹரன்னகொட பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்த சுற்றிவளைப்பின் போது, T56 ரக துப்பாக்கி, மகசின், T56 ரக தோட்டாக்கள் 16, 9mm தோட்டா மகசின் ஒன்று மற்றும் 144 கிராம் ஹெரோயின் ஆகியவற்றை மீட்டியாகொட பொலிஸாரை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space