தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 29வது கி.மீ (29 km) தூண் அமைந்துள்ள பகுதியில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றின் பின்புறத்தில் கார் மோதியதில் கார் வீதியில் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் எவருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீதியில் கவிழ்ந்த காரை நெடுஞ்சாலை அதிகாரிகள் வருகை தந்து அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.