தெற்கு ஆசியாவில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு. அது, தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் அதன் உத்திகள் பாராட்டுக்குரியது. இந்தோ-பசிபிக் பாதுகாப்பு அமைப்பில், இந்தியாவின் பங்கு முக்கியமானது.
தெற்காசியாவில், எல்லையைப் பாதுகாப்பதில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக உள்ளது. பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. உயர்தர ராணுவ நடவடிக்கைகளைத் தக்கவைக்க, பலமான தொழில்முறை மற்றும் தளவாடத் திறனை இந்தியா உருவாக்கி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. இரு நாடுகளும் ராணுவத் தயார்நிலை மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்க கூட்டு தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜாவெலின் என்ற டேங் எதிர்ப்பு ஏவுகணைகயை மேம்படுத்த இந்தியாவுடன் கூட்டு தயாரிப்பைத் தொடர நாங்கள் உறுதியளித்துள்ளோம். ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ராணுவ செலவுகளை அதிகரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த ஆயுதங்களை அதிக அளவில், அதிவேகத்தில் மற்றும் நியாயமான விலையில் நாங்கள் தயாரிப்போம். அதிபர் ட்ரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக 1 டிரில்லியன் டாலர் செலவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.