விதையனைத்தும் விருட்சமே அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையும் இணைந்து ஆறாம் கட்டமாக முன்னெடுக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (22.11.2026) யாழ்.தெல்லிப்பழையில் இடம்பெறும்.
நாளை காலை-07.30 மணியளவில் பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய முகப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு ஆரம்பமாகித் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஊடாகத் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை இடம்பெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைப் பிளாஸ்டிக் அற்ற பிரதேசமாக மாற்றப் பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்அழைப்பு விடுத்துள்ளனர்.