மாவீரர் நாளையொட்டி மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு யாழ்.தெல்லிப்பழைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நாளை புதன்கிழமை (25.11.2026) நடைபெறும்.

நாளை மாலை-05.30 மணியளவில் தெல்லிப்பழைச் சந்திக்கு அண்மித்த பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டுத் தொடர்ந்து மாவீரர் நினைவாலயத்தில் கெளரவிப்பு நிகழ்வு நடைபெறும்.